Breaking
Tue. Dec 9th, 2025
பாடசாலை சென்ற மாணவர்கள் மற்றும் தோட்ட தொழிலுக்காக சென்ற தரப்பினரை தவிர மண்சரிவு ஏற்பட்ட மீரியபெத்த கிராமத்தில் இருந்த ஏனைய அனைவரும் உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கை இல்லை என  அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மண்சரிவு ஏற்பட்ட மண்மேட்டு பகுதிக்கு பின்னால், நிலச்சரிவு ஏற்படுவதன் காரணமாக மீட்பு பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மண்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் 500க்கும் அதிகமான பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக உலங்கு வானுர்தி ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வான்படை தெரிவித்துள்ளது.

Related Post