Breaking
Fri. Dec 5th, 2025
வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பிரதியமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ள மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக பேஸ்புக்கில் கடுமையான கண்டனங்கள் குவிந்து கொண்டிருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார, மிகவும் தீவிரமான மஹிந்த ஆதரவாளராக தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்தார்.

இதன் ஒரு கட்டமாக ஜனாதிபதி மைத்திரியை கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கவும் செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் அணி மாறி மைத்திரியின் அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியொன்றைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து நடுநிலையாளர்கள் மற்றும் மஹிந்த ஆதரவாளர்கள் பேஸ்புக்கில் கடுமையான கண்டனங்கள் மற்றும் வசவுகளைப் பதிந்து கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன் மனுஷவின் பேஸ்புக் பக்கத்திலும் இவ்வாறான பதிவுகள் பின்னூட்டங்களாக பதியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரதியமைச்சர் மனூஷ நாணயக்கார தற்போது தனது பேஸ்புக் கணக்கை தற்காலிகமான மூடிவைத்துள்ளார்.

By

Related Post