Breaking
Mon. Dec 15th, 2025

சேவைக்காலம் நிறைவடைந்தும் சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வரும் படி கூறி நபரொருவர் வேலைவாய்பு பணியகமொன்றின் முன் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

குருநாகலையில் உள்ள வேலைவாய்ப்பு பணியகமொன்றின் முன்னாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது பிள்ளையுடனேயே குறித்த கணவர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். வெட்டுக்கத்தி மற்றும் விஷ போத்தல் ஆகியவற்றையும் அவர் தன் வசம் வைத்திருந்துள்ளார்.

பின்னர் அவ்விடத்துக்கு வந்த பொலிஸார் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.

Related Post