மன்னார் உப்புக்குளம் அல் பதாஹ் விளையாட்டுக்கழகம்  நடாத்திய விளையாட்டு நிகழ்வில் பிரதம அத்தியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

மன்னார் உப்புக்குளம் அல் பதாஹ் விளையாட்டுக்கழகம்  நடாத்திய ரிஷாட் பதியுதீன் வெற்றிக் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

இந்தப் போட்டியில் முதலாம் இடத்தை அல் பதாஹ் விளையாட்டுக் கழகமும், இரண்டாம் இடத்தை அல் ஜின்னாஹ் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டது.
சம்பியனான அல் பதாஹ் விளையாட்டுக் கழகத்திற்கு அமைச்சர் ரிஷாட்பதியுதீன் வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், அமைச்சரின் இணைப்பாளர் அலிகான் ஷரீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.