மின்சாரமற்ற அனைவருக்கும் மின்சாரத்தை வழங்கும் அரசின் திட்டத்தின் கீழ் மன்னார் பெரியகரிசலுக்கான மின் விநியோகத்தை கைத்தொழில்.,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆரம்பித்து வைத்தார்.
மன்னார் –தலைமன்னார் பிரதான வீதி அருகில் அமைந்துள்ள கரிசல் கிராம மக்களின் நலன் கருதி இந்த மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முழு நாடும் ஒளி பெறுகிறது என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ,வடக்கின் வசந்தம் மின்சார திட்டத்தின் மூலம் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
தற்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் மின்சாரத்தை பெற்றுள்ளதாகவும்,மின்சாரம் கிடைக்காதவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் இங்கு கூறினார்.
இந்த நிகழ்வில் மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன்,தொழிலதிபர் எஸ்.கே.பீ.அலாவுதீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

