Breaking
Fri. Dec 5th, 2025

ஏ.எச்.எம். பூமுதீன்

கல்முனை மாநகர சபையை கைப்பற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வியூகத்துக்குப் பக்கபலமாக செயற்பட மருதமுனை இளைஞர் சமூகம் உறுதிபூண்டுள்ளது.

மருதமுனை திறந்த வெளியில் நேற்று மாலை (24) இடம்பெற்ற கலந்துரையாடலில் நான்கு வட்டாரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 50 இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

குறுகிய நேர அழைப்பின் பேரில் கலந்துகொண்ட இவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்கு உழைப்பதென்றும், தலைமையின் கரத்தை பலப்படுத்தவும் உறுதிபூண்டனர். அத்துடன், மருதமுனையில் களமிறங்கியுள்ள நான்கு வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைப்பதென ஒருமித்து கருத்து வெளிப்படுத்தினர்.

மருதமுனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழுவுடன் இணைந்து, தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் செயற்பாட்டு குழுவாகவும் இவர்கள் பணியாற்ற உள்ளனர்.

கல்முனை மாநகர சபைக்கான மக்கள் காங்கிரஸின் போனஸ் ஆசனத்துக்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பூமுதீன் மலீக்கின் நெறிப்படுத்தலில், கட்சியின் முக்கியஸ்தரும் மத்திய குழுவின் பிரதித் தலைவருமான எம்.எ. சம்சுல் அமான் தலைமை தாங்கிய இக்கலந்துரையாடலில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துல்கர் நயீம் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகரான எம்.ஐ.எம்.முகரப் ஆகியோரும் பங்குபற்றினர்.

 

 

 

Related Post