மலேசியாவி்ன் முன்னாள் பிரதமர் மஹதீா் முஹம்மத் இன்று இலங்கை வந்தடைந்தார்

அஸ்ரப் ஏ. சமத்

மலேசியாவி்ன் முன்னாள் பிரதமரும் மலேசியாவை அபிவிருத்தியாக்கிய தலைவருமான மஹதீா் முஹம்மத் இன்று (09) இலங்கை வந்தடைந்துள்ளாா். இவா் இன்று பி.எம்.ஜ.சி.எச்.ல் வைத்து இலங்கை அபிவிருத்தி பற்றி உரையாடுவாா்.

அத்துடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் புதிய நகரம், கட்டுநாயக்க பொருளாதார ஆடை தொழிற்சாலைகள் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்து வைப்பாா்.

இக்காலகட்டத்தில் வருமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே அழைப்புவிடுத்திருந்தாா்.

இவரது சகல ஏற்பாடுகளையும் நாமல் ராஜபக்ச செய்துள்ளாா். மேற்படி திட்டங்களுக்கு மலேசியா தனியாா் கம்பணிகள் முதலிடுகின்றன.

அத்துடன் முஸ்லீம் கட்சித் தலைவா்களையும் சந்திப்பாா்.