மழையும், காற்றும் தொடரும் – வானிலை அவதான நிலையம்

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்த ரோனு சூறாவளி காங்கேசன்துறைக்கு வடக்கே 900 கிலோமீ்ற்றர் தொலைவில் வடக்கு நோக்கி இலங்கையை தாண்டி செல்வதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பலபாகங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது.
இது மேலும் உக்கிரமடைந்து நாடு முழுவதும் பரவலான மழை வீழ்ச்சியை ஏற்ப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் மழை பெய்வதுடன், கடலோரங்களில் காற்றுடன் மழையும் காணப்படுமென வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.