கண்டி மேல் நாட்டு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த வீரர்களுக்கு புண்ணியம் வேண்டி கதிர்காமம் கிரிவேஹர விகாரையில் நேற்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றன. இதனையடுத்து போதி மரத்திற்கு அருகில் போதி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாளவ மேதானந்த தேரர், முன்னாள் அமைச்சர்கள், விமல் வீரவன்ஸ, காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன, குமார வெல்கம, உதய கம்மன்பில, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ஊவா முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச உட்பட பலர் கலந்து கொண்டனர்.

