Breaking
Sat. Dec 6th, 2025

கொழும்பு 14 ஸ்ரீமாவோ பண்டார நாயக்க மாவத்தையில் அமைந்துள்ள கலைமகள் வித்தியாலயத்தில் மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா பாடசாலை  அதிபர் தலைமையில் நேற்று (11) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அதிதிகளாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் , மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய ஆகியோர் கலந்து கொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் வேண்டுகோளிற்கிணங்க முதலமைச்சரின் நிதியில் இந்த கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. ரூபா 80 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள  இந்த கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வலய கல்விப்பணிப்பாளர்கள் , கல்வி அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

கொழும்பு மாவட்ட பாடசாலைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் மாகாண சபை உறுப்பினர்  பாயிஸ்,  பாடசாலைகளின் வளப் பற்றாக்குறையை தீர்த்து வைக்க அரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

Related Post