மாஞ்சோலை பதுரியா அல்/மினா வித்தியாலய கட்டிடத்திறப்பு நிகழ்வும்.. பரிசளிப்பு விழாவும்!  

மட்டக்களப்பு மாவட்ட மத்திய கல்வி வலையத்துக்குட்பட்ட ஓட்டமாவடி – மீராவோடை பதுரியா நகர் அல் / மினா வித்தியாலயத்தின் 07 வது பரிசளிப்பு விழா மற்றும் புதிய மாடிக் கட்டிடத் திறப்பு நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

அதிபர் எல்.ரீ.எம். சாதிக்கீன் தலைமையில் அண்மையில் (04) இடம்பெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக முன்னாள் பிரதி தவிசாளர் நெளபல், முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ரப், உதவிக் கல்விப் பணிப்பாளர் கலீல் ரகுமான் மற்றும் கல்வி அதிகாரிகள், ஊர்ப் பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த பாடசாலையில் கல்வி பயின்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி, தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களையும் பாராட்டி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.