-ஊடகப்பிரிவு-
கொழும்பு 15, மோதரை புனித ஜேம்ஸ் ஆரம்ப பாடசாலையின் மாணவத் தலைவர் தின விழா, அண்மையில் பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான முஹமட் பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதேவேளை, 2018ஆம் ஆண்டுக்கான மாணவத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கான சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.





