மாந்தை உப்பு கூட்டுத்தாபனத்தின் சுற்றுலா விடுதி கட்டிட திறப்புவிழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நிர்மாணிக்கப்பகவுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் அந்நிறுவனத்தின் சுற்றுலா விடுதி கட்டிட அங்குரார்ப்பண நிகழ்வு மன்னாரில் இன்று (27) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்  கலந்து கொண்டார்.
மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம் எம் அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஸ்டேன்லி டி மெல், பிரதேச செயலாளர்கள், நிறுவனத்தின் பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.