Breaking
Fri. Dec 5th, 2025

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு (செல்லத்தம்பு) அவர்களினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏக மனதாக இன்று நிறைவேற்றப்பட்டது.(2018.12.12)

25 உறுப்பினர்களை கொண்ட மாந்தை மேற்கு பிரதேச சபையில் இன்றைய அமர்வில் பங்கு கொண்ட அணைத்து உறுப்பினர்களும் சபை தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு செலவு திட்டத்திற்கு ஒருமித்து ஆதரவு வழங்கியமை சிறப்பம்சமாகும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம் உள்ள மாந்தை மேற்கு பிரதேச சபையில் முஸ்லீம் காங்கிரஸ் ,தமிழ் தேசியக்கூட்டமைப்பு ,சுதந்திரக்கட்சி ,ஏனைய தமிழ் கட்சிகள், சுயேட்சைக் குழு போன்ற கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதும் குறிப்பிடத் தக்கதாகும்

எதிர்காலத்தில் எமது பிரதேசத்தின் அபிவிருத்தியில் இணைந்து செயற்படுவது என்ற தவிசாளரின் யோசனைக்கு உறுப்பினர்கள் தமது ஆதரவினை வழங்கி இருந்ததையும் அவதானிக்க முடிந்தது…

சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவு திட்டத்துக்கு ஆதரவு அனைத்து உறுப்பினருக்கும் தவிசாளர் சந்தியோகு (செல்லத்தம்பு) தனது நன்றிகளை தெரிவித்தார்….

-ஊடகப்பிரிவு-

Related Post