Breaking
Fri. Dec 5th, 2025

– சிராஜுல்ஹஸன் –

நபிகளாரின்(ஸல்) உருவத்தைக் கேலி சித்திரமாக வரையும் போட்டி

அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்றது. “அமெரிக்க சுதந்திரப் பாதுகாப்பு இயக்கம்” எனும் அமைப்பு இதை நடத்தியது. கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக இது நடத்தப்பட்டதாம். இந்த இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தெரியாமல் நடந்துவிட்டால் மன்னிக்கலாம். ஆனால், வேண்டுமென்றே, உலக அளவில் முஸ்லிம்களின் மனங்களைப் புண்படுத்தும் நோக்கத்திலேயே இந்தப் போட்டி நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு இந்தச் சுதந்திரப் பாதுகாப்பு இயக்கத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்தச் சமயத்திலாவது மானம்கெட்ட முஸ்லிம் நாடுகள் முன்வந்து அமெரிக்காவைக் கண்டிக்க வேண்டும்.

தூதரக உறிவை முறித்துக்கொள்ளவேண்டும். எண்ணெய் ஏற்றுமதியை மேலைநாடுகளுக்கு நிறுத்த வேண்டும். இந்த வக்கிரத்தைக் கண்டிக்கும் வகையில் இன்றைய இந்திய (6.5.115) தினமணி நாளிதழான ஒரு கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.

தினமணிக்கும் மதி அவர்களுக்கும் நன்றிகள். தினமணிக்கு உள்ள ரோஷம்கூட முஸ்லிம் நாடுகளுக்கு இல்லாமல் போய்விட்டதே…வெட்கம்…வெட்கம்…!

mm

Related Post