முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்திற்கான தடை தற்காலிகமாக நீக்கம்

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு தீர்மானித்திருப்பதாக பொது அமைதி, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில்  கருத்துக்களை  வழங்குவதற்கு மக்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டதை தொடர்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவத்தார்.

எதிர்வரும் 21 ஆம் திகதியில் இருந்து முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.