முதலமைச்சர் வித்தகர் விருது பெற்றார் (photos)

கலாபூஷணம் பி.ரி. அஸீஸ் 2014 ஆம்; ஆண்டுக்கான கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முதலமைச்சர் வித்தகர் விருதைப் பெற்றுள்ளார். கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆண்டுதோறும் நடாத்தும் இலக்கிய விழாவின் இவ்வருடத்திற்கான நிகழ்வு அண்மையில் அம்பாறை டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தின் போதே இலக்கியம் மற்றும் சமூக சேவைக்காக கலாபூஷணம் பி.ரி. அஸீஸ், முதலமைச்சரினால் வழங்கப்படும் வித்தகர் விருதும் பொற்கிழியும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
 
தகவல் மற்றும் படங்கள் – வெலிகம ரிம்ஸா முஹம்மத்
P.T. Asees 02 P.T. Asees 03 P.T. Asees 01