முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவவியின் நிதிஒதுக்கீட்டில் அபிவிருத்திப் பணிகள்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவியின் DCB நிதி ஒதுக்கீட்டில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் கிழக்கு கிளை மற்றும் புத்தளம் இளைஞர் அமைப்பாளர் இப்ளால் அமீன் வேண்டியதற்கமைய

*180,000 ரூபா செலவில் புத்தளம் சவீவபுரம் உள்ளக ஒழுங்கைகளை ABC கற்களால் செப்பனிடலும்,

*250, 000 ரூபா செலவில் செய்னப் பாடசாலைக்கான சுற்று மதில் நிர்மானமும் (பகுதி நிதி பாடசாலை அபிவிருத்தி சபையும் அயலோரும்),

*80,000 ரூபா பெறுமதியில் புத்தளம் கிழக்கு சி.த.மு மகளிர் சங்கத்துக்கு காரியாலய  உபகரணங்களும் வழங்கப்பட்டது.

அத்தோடு வடிகாண் புனரமைக்க தேவையான சீமெந்தும், தார் பாதைகளாக தரமுயர்த்த வேண்டிய செலவையும் தனது சொந்த முயற்சியில் பெற்று தருவதாக சவீவபுர குடியிருப்பாளர்களுக்கு முன்னாள் எம்.பி நவவி வாக்குறுதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.