Breaking
Sun. Dec 7th, 2025
அமைச்சரவையில் உள்ள முஸ்லீம் அமைச்சர்களை புலனாய்வு பிரிவின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருமாறு பொதுபலசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலான்தே விதானகே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இலங்கையில் முஸ்லீம் தீவிரவாதம் உள்ளதாக தாங்கள் விடுத்துவரும் எச்சரிக்கை உண்மையாக மாறிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை முஸ்லீம்கள் உளவாளிகளாக பயன்படுத்தப்படுவது குறித்த இந்திய தகவல்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இலங்கையிலிருந்து செயற்படும் முஸ்லீம் தீவிரவாதிகள் இந்தியாவையும் தென்னாசியாவையும் பலவீனப்படுத்த முயல்கின்றனர் என்பதே உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கமும், பொலிஸ், இராணுவ பேச்சாளர்களும் இந்த உண்மைய ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அமைப்பு என்ற ரீதியில் நாங்கள் இலங்கையில் முஸ்லீம் தீவிரவாதம் உள்ளதை வெளிப்படுத்த தயங்க மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லீம் அமைச்சர்களின் நடமாட்டத்தை முடிந்தால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களதும் நடமாட்டத்தையும் அரசாங்கம் கண்காணிக்க வேண்டும் ,என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Post