Breaking
Sat. Dec 6th, 2025

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்)

இன்று அரசியல் புலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் , அமைச்சர்களாகவும் , சிரேட்ட அமைச்சர்களாகவும் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் முந்நாள் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் அரசியல் படிக்க வேண்டும்.ஒப்பீட்டு அளவில் இளம் வயது உடைய அவர் அரசியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

கோடிக்காக கட்சி மாறும் யுகத்தில் மக்களுக்காக மக்களின் அனுமதியுடன் கட்சி மாறிய இவரை இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் தேசியத்தலைவராக உயர்த்தி வைத்துப் பார்க்கின்றனர்.

அரசில் இருந்து கொண்டே தம்புள்ளை முதல் அளுத்கமை வரை நடந்த அட்டூழியங்களுக்கு எதிராகப் பலமாகப் போராடிய இவரின் அமைச்சுக்குள்ளேயே ஒரு மதக்குழு பலத்காரமாக சென்று கோதனை நடாத்தி உள்ளமை யாராளும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.இதையும் பொறுத்தக் கொண்டே காலம் கனியும் வரை காத்திருந்த இவரின் பொறுமை போற்றத்தக்கது.

மறிச்சுக்கட்டி மக்களின் மீள்குடியேற்றத்தை , மறித்துக்கட்டவும் களத்தின் இறங்கியோரின் செயலை மறக்க முடியுமா? மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை இது.

Related Post