மேலதிகமாக 1000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ள உத்தேசம்

அடுத்த வருடம் முதல் மேலதிகமாக ஆயிரம் மாணவர்களை பல்கலைகழகங்களில் இணைத்துக்கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

அதற்கமைய புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும் எண்ணியுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிடுகின்றார். புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பல்கலைக்கழகங்களுக்கு மேலதிக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.