Breaking
Fri. Dec 5th, 2025

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயம் வெற்றி பெறுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சுனாமிப் பேரலையின் தாக்கத்தினால் 2004 ஆம் ஆண்டு அனைத்துக் கட்சிகளும் பேதமின்றி இணைந்து செயலாற்றின. இதனால் குறுகிய காலத்திலேயே நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடிந்தது.

இதைப்போன்றே இப்போதும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. எனவே அடுத்த மாதம் ஜனவரி 8 ஆம் திகதி நடக்கும் தேர்தலில் வெற்றிபெறுவோம்.

‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ நிதி முறைகேடு சம்பந்தமான வழக்கில் தீர்ப்பு வழங்கிய அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பின்னர் தான் வழங்கிய தீர்ப்புத் தவறானது என்று கூறியிருந்தார்.

தற்போது நாட்டை ஆளும் அரசின் நடவடிக்கையால் நாடு பெரும் அழிவைச் சந்தித்தது. இதனால் நாட்டை மீளகட்டியெழுப்ப வேண்டும்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயம் வெற்றி பெற்று நாட்டை கட்டி எழுப்புவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post