Breaking
Sat. Dec 6th, 2025
ஆலோசனைக்கு அமையவே தாம் வெளிநாடு சென்றதாக மேல் மாகாணசபையின் உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில் தமக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமையவே இவ்வாறு நாட்டை விட்டு தாயுடன் தாம் வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க எடுத்தத் தீர்மானத்தை தொடர்ந்தே இவ்வாறு தமக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவும், ராஜித சேனாரட்னவுமே வெளிநாடு செல்லுமாறு ஆலோசனை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
தமது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை கருத்திற் கொள்ளாது தொடர்ச்சியாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவிடம் பெற்றுக்கொண்ட லஞ்சப் பணத்தை வைப்பிலிடுவதற்கு வெளிநாடு சென்றதாக சில ஊடகங்கள் பிழையான செய்திகளை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிரான சேறு பூசல்களை கண்டு அஞ்சப் போவதில்லை எனவும் நீதிக்காக போராடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Gtn

Related Post