மைத்திரி அமைச்சரவையில் மனோ; ஐ.தே.க. தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகிறார்(?)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

தற்போது மேல் மாகாண சபையின் உறுப்பினராகவுள்ள மனோ கணேசனுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கும் என்று தெரிகிறது.

பொது எதிரணியின் முக்கியஸ்தராக மனோ கணேசன் ஆரம்பம் முதலே செயற்பட்டு வந்தது சுட்டிக்காட்டத்தக்கது.