கடந்த மாதம் 26ம் திகதி இலங்கை எல்லையைத் தாண்டி மீன் பிடித்தனர் என்று தமிழக மீனவர்கள் 86 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இவர்கள் முல்லைத் தீவு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாளில் ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தமிழக சிறைகளில் இருந்த 12 இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இது பரஸ்பரம் நல்லெண்ண நடவடிக்கை என்றம் தகவல் வெளியாகியுள்ளது.

