யாழ்ப்பாணத்தில் 1956ஆம் ஆண்டு ஒரு பாடசாலையின் தேவை உணரப்பட்டது அப்போது ஒன்று சேர்ந்த மக்கள் 1958 ஆம் கட்டட நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தனர். 1963 ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் மஹ்மூதினால் இந்த பாடசாலை திறந்து வைக்கப்பட்டது.
1990 அம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதரன சூழலினால் மக்கள் இடம்பெயர்ந்ததனால் இங்குள்ள மாணவர்களின் தொகை குறைந்தது. 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த பாடசாலை மீண்டும் இயங்க துவங்கியது.தற்போது இந்த பாடசாலை உயர் தர வகுப்பு வரை கொண்டுள்ளது.
இந்த பாடசாலைக்கான கட்டிடம் ஒன்றினை பெற்றுத்தருமாறு அப்போதைய அரசில் இருந்த போது அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்த கட்டிடத்துக்கான நிதியினை அமைச்சர் கல்வி அமைச்சின் செயலளாருடன் கலந்துபேசி ஒதுக்கீடு செய்திருந்தார்.
அதனடிப்படையில் நிர்மாணிக்கப்ட்ட இந்த பாடசாலையின் இரண்டு மாடிக்கட்டிடம் நேற்று அமைச்சர் றிஷாத் பதியுதீன்,வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் வீ.மகேந்தி ராஜா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


