Breaking
Sun. Dec 7th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம். நியாஸ் நிலாமின் விஷேட வேண்டுகோளுக்கிணங்க, யாழ் மாநகர முதல்வர் திரு.அர்னோல்ட் அவர்களின் அனுமதியினால் யாழ் மாநகர சபையினால் நேற்று முன்தினம் (14) சோனகத் தெருவில் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டன.

புனித ரமழானை முன்னிட்டு இந்தப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டமையால். தமது மார்க்கக் கடமைகளை  மேற்கொள்ள பெரும் உதவியாக இருக்கும்  எனவும்,  அதற்காக உறுப்பினர் நிலாம் அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இந்த வேலைத்திட்டத்திற்கு மக்கள் காங்கிரஸின் யாழ்மாவட்ட முக்கியஸ்தர் ஆ.கே.சுவர்கஹான் உறுதுணையாக இருந்தார்.

(ன)

 

 

 

Related Post