யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நிலாம், அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் வீட்டுக்கு விஜயம்!

-எப்.சனூன்-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட கிளைத் தலைவரும், யாழ் மாநகர சபை உறுப்பினருமாகிய கே.எம்.நிலாம், அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் வீட்டிற்கு இன்று (11)விஜயம் செய்து, அக்குடும்பத்திற்கு தனது ஆறுதலை தெரிவித்தார்.

அத்துடன் பிள்ளைகளை கிளிநொச்சி நகர்ப்புற கடைகளுக்கு அழைத்துச் சென்று, அவர்கள் விரும்பிக்கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்தார்.
மேலதிமாக வீட்டில் கல்வி கற்பதற்கான தளபாடங்கள், மகள் சங்கீதா ஆசைப்பட்டுக்கேட்ட பாடசாலைக்குச் செல்ல துவிச்சக்கர வண்டி மற்றும் பாதனிகள், வீட்டில் அணிவதற்கான ஆடைகள் என்பனவற்றை வாங்கி கொடுத்ததுடன், அவர்களின் தந்தையின் விடுதலைக்காக தனது குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் என்றும் தெரிவித்தார்

மேலும், ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அவரின் விடுதலைக்காக மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியூதினூடாக அரச தலைவர்களுடன் தொடர்ந்து பேசுவதாகவும் அவர்களிடம் உறுதியளித்தார்.