யெமன் போரில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவமனையில் சவூதி இளவரசர் ஆறுதல்!

யெமனி ல் நடைபெறும் உள்நாட்டு போர் கடந்த மார்ச் 19-ந் தேதி முதல் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையில் அதன் நட்பு நாடுகளும் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தின.

இதற்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் எதிர் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் பெருமளவில் ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை சவுதி அரேபியா இளவரசர் பைசல் பின் காலித் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினார்.