Breaking
Mon. Dec 8th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் மீள்குடியேற்ற செயலணியின் இணைத்தலைவருமான அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்திற்கான அபிவிருத்திப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.

சுமார் 10.174 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் அபிவிருத்தி பணிகளை அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் மற்றும் மீள்குடியேற்ற செயலணி மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜிபுர் ரகுமான் ஆகியோரும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது

01.நூர்டீன் மசூர் பாலர் பாடசாலை
02.தர்கா நகருக்கான அணைக்கட்டு
03.எருக்கலம்பிட்டி மகளீர் பாடசாலைக்கான மலசல கூடம்
04.அல் ஷெய்தியா அரபுக்கல்லூரிக்கான மலசலகூடம்
05.RDS கட்டடத்திற்கான மலசல கூடம்
06. எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயம் மைதான அரங்கு

போன்றவற்றின் நிர்மாணப்பணிகளில் இவ் 6 திட்டங்களின் சில நிர்மாணப்பணிகள் நிறைவடையும் நிலையிலும் ஏனைய பணிகள் நடைபெற்ற வண்ணமும் காணப்படுகின்றது.

குறிப்பாக மீள்குடியேற்ற செயலணியூடாக நிதி ஒதுக்கப்பட்ட இரண்டாவது வெற்றிகரமான திட்டம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post