சிங்கப்பூரின் தந்தை மற்றும் ‘நவீன சிங்கப்பூரின் சிற்பி’ என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உடல்நலக்குறைவு காரணமாக கடந்த திங்கட்கிழமை காலமானார். அவரது இறுதிச்சடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகின்றது.
இதில் கலந்துகொள்ள முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தலைமையிலான அமெரிக்கா குழு சிங்கப்பூருக்கு செல்வதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பில் கிளிண்டன் தலைமையிலான குழுவில், அந்நாட்டு முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹென்றி கிஸ்ஸிங்கரும் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று அந்நாட்டு பாராளுமன்ற வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக லீ குவான் யூ-வின் பூத உடல் வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அணி அணியாக திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல ஆசிய நாட்டு தலைவர்கள், லீ குவான் யூ-வின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

