Breaking
Sat. Dec 6th, 2025

ஒலுவில் துறை முக வளாகத்தினுள் குவிக்கப்பட்டிருக்கும் மண்களை அகழ்ந்து விற்பனை  செய்வதற்கு அதிரடி தடையினை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் விதித்துள்ளார்.

கொழும்பு துறை முக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கட்டிடத்தில் இன்று (10) புதன் கிழமை  துறை முக அதிகார சபை உயரதிகளுடன் இடம் பெற்ற  விசேட கலந்துரையாடலின் போதே இத் தீர்மானத்தை பிரதி அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

துறை முக அதிகார சபையினால் திறந்த விலை மனுக்கோரல் ஒன்று மண் அகழ்ந்து விற்பனை தொடர்பில் பத்திரிகை விளம்பரம் கோரப்பட்டிருந்தது.

  ஒலுவில் பள்ளிவாயல் சம்மேளனம் மற்றும் மக்கள் விடுத்த வேண்டுகோளிற்கிணங்கவும் அதிரடி நடவடிக்கையாக மண் விற்பனையை பிரதி அமைச்சர் நிறுத்தியுள்ளார்.

குறித்த சந்திப்பில் இலங்கை துறை முக அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் அதுல ஹேவவிதாரன உள்ளிட்ட  பல முக்கிய உயரதிகாரிகள் கலந்து கொட்டனர்கள்.

Related Post