Breaking
Mon. Dec 15th, 2025

வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தென்கொரியா-அமெரிக்கா இணைந்து மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சியில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன.

நீரிலும், நிலத்திலும் நடக்கவிருக்கும் இந்த பயிற்சிகள் வரும் மார்ச் 28-ல் தொடங்கி ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெறும். இருநாடுகளும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பயிற்சியில் அமெரிக்க கடற்படையை சேர்ந்த 1000 வீரர்களும் தென்கொரியாவை சேர்ந்த 300 வீரர்களும் பங்கு பெற இருக்கிறார்கள்.

கொரியா பிரிவினைக்கு பிறகு தென் மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையை நிலவுகிறது. வடகொரியாவின் பலத்த எதிர்ப்பையும் மீறி ஆண்டுதோறும் தென்கொரிய-அமெரிக்க ராணுவம் இந்த பயிற்சிகளை நடத்தி வருகின்றன. சென்ற ஆண்டு இந்த பயிற்சிகள் 4 வாரங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது நடைபெற போகும் ராணுவ பயிற்சியால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Related Post