வட்டக்கண்டல் வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் நைசர் அவர்களினால்,  நீண்டகாலமாகப்  புனரமைக்கப்படாமல் இருந்த மன்னார், மாந்தை, வட்டக்கண்டல், காத்தங்குள வீதியின் புனரமைப்பு வேலைத்திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடந்த தேர்தல் காலத்தில் இந்த பிரதேசத்தில் வாழும் மக்கள், நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ள இந்த வீதியை புனரமைத்து தருமாறு வேண்டியிருந்தனர். அந்த மக்களின் நீண்டகாலத் தேவையை நிறைவுசெய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.