புத்தளத்தில் வாழும் வடக்கு மக்களின் பிரச்சினைகள் நேரில் கேட்டறிவு

மன்னார்  பிரதேச சபைத் தலைவர்  எஸ்.எச்.எம்.முஜாஹிர் வட மாகாண முஸ்லிம்களின் அகதி முகாம்களான கரம்பை, கல்ப்பிட்டி, கண்டக்குழி, பள்ளிவாசல்துறை, கண்டக்குடா, நுரைச்சோலை, ஆலங்குடா, மற்றும்  கொய்யாவாடி முகாம்களுக்கு நேற்று (16) விஜயம் செய்தார்.

தவிசாளர் குழு அங்குள்ள முகாம் அதிகாரிகள், பள்ளிவாசல் தலைவர்கள், கிராம முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் மீள்குடியேற்றம், அடிப்படைத்தேவைகள் மற்றும் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர். தவிசாளர் இது தொடர்பாக கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களது மேலான கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு, உரிய தீர்வுகளை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் தவிசாளராக தன்னால் முடியுமான உதவிகளை தான் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இடம்பெயர்ந்த முகாம்களுக்கான அமைச்சரின் இணைப்பாளர் ஜெசீல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் றிபாஸ் நசீர், மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர் மதீன் ஆசிரியர் உட்பட பலர் கலந்துகொண்டு மக்களது குறைநிறைகளை கேட்டறிந்துகொண்டனர்.