வவுனியாவில் வேலையற்ற யுவதிகளுக்கான தையல் பயிற்சி நெறி

வவுனியாவில்  வேலையற்ற யுவதிகளுக்கான  தையல் பயிற்சி நெறி அங்குரார்ப்பண நிகழ்வில் (22) , கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமாகிய சட்டத்தரணி மில்ஹான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
 அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் வழிகாட்டுதலின் படி பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டத்தில் மூவின யுவதிகளும் பயன் பெறும் பொருட்டு  தையல் பயிற்சியும் அதனைத் தொடர்ந்து அவசியமான உபகரணங்களும் வழங்கப்பட்டு சந்தைப்படுத்த உதவியும் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வவுனியா மாவட்ட இணைப்பாளர்களான பாரி, முத்து முஹம்மது , அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி மொஹிதீன் உட்பட திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும்  கலந்து கொண்டனர்.
எம். என்.எம்.பர்வீஸ்