வவுனியா தெற்கு பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு-

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  வவுனியா தெற்கு பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு  இன்று (04) வவுனியாவில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட  பிரதேச வாசிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.