Breaking
Fri. Dec 5th, 2025
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த, நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக, இந்நாட்டின் இளைய தலைமுறையை தொழில்நுட்பத்திலும் ஸ்மார்ட் கணனி பயன்பாட்டிலும் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்பும் ‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தின் ஊடாக, வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு, இன்று (07) வவுனியா, மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலத்தில் நடைபெற்றது.
 
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில், விஷேட அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் மற்றும் கல்வி அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

Related Post