வவுனியா மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராமங்களுக்கு கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
வடமாகாண சபை உறுப்பினர் வீ.ஜயதிலகவின் அழைப்பின் பேரில் அடமஸ்கட, கலுக்குன்னாமடம், நெடுங்குளம், அவரந்துலாவ,மருதமடு,நெலுக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் அமைச்சரின்நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வும்,பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்களும் இன்றைய விஜயத்தின் போது அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் வாழும் சிங்கள மக்களின் கல்வி, உட்கட்டமைப்பு வசதி உள்ளிட்ட இன்னோரன்ன தேவைப்பாடுகள் தொடர்பில் பிரதேச மக்கள் மற்றும் அதிபர்கள், அமைப்புக்களின் பிரதி நிதிகளுடன் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துரையாடல்களை நடத்தினார்.
மக்களது பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பில் மக்கள் பிரதி நிதிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுப்பதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.
இந்த விஜயத்தின்போது நுகர்வொர்அதிகார சபை பணிப்பாளர் ருவான் லங்கேஸ்வரன்,அமைச்சரின் இணைப்பு செயலாளர் முத்து முஹம்மத்,ஷாஹிப் மொஹிதீன் உட்பட பலரும் இணைந்து கொண்டனர்.


