Breaking
Sat. Dec 6th, 2025

கடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கமைய செட்டிகுளம் பிரதேச சபையின் பிரதித்தவிசாளர் சிவாஜினியின் (அ.இ.ம.கா) வேண்டுகோளின் படி, இந்தக் கிராமத்தின் முக்கிய தேவையாக ஊர் மக்களால் தங்களது ஆலயத்தினை புனரமைப்பு செய்து தருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனினால் ரூபாய் 10 இலட்சம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு முகத்தான்குளம் இந்து ஆலயத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்றபோது, பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், வவுனியா நகரசபை உறுப்பினர் அப்துல் பாரி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், ஆலய நிர்வாகிகள் உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஊர்மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

Related Post