கிளிநொச்சி – தர்மகேணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மரக்கறி ஏற்றி வந்த லொறி ஒன்று வேகத்தைக் கட்டுப்பாடுத்த முடியாமலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விபத்து தொர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

