நூறு நாட்கள் வேலைத்திட்டம் என்பது தேசிய அரசாங்கத்திற்கான பிரசாரமே தவிர கோட்பாடு அல்ல. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்ப டும் வரையில் தேசிய அரசாங்கத்தினை கொண்டு செல்ல வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதித் தலைவரும் தூய்மைக்கான நாளை அமைப்பின் தலைவருமான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து செயற்படுவதே தேசிய அரசின் பலம் எனவும் சுட்டிக்காட்டினார்.
சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பு கோட்டே நாக விகாரையில் இடம்பெற்றது. இதில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சர்வாதிகாரமாக செயற்பட்ட மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியினை வீழ்த்தவும் மக்கள் விரு ம்பும் வகையில் ஆட்சியினை அமைக்க வேண்டுமென இவ் அரசாங்கத்தினை உருவாக்கவும் நாம் பாரிய கஷ்டங்களை எதிர்கொண்டே மாற்றத்தினை ஏற்படுத்தினோம். அதிகாரத்தில் யார் இருக்கின்றனர் என்பதை விடவும் மக்கள் அரசாங்கத்தை விரும்புகின்றனரா என்பதே முக்கியமானது. நாம் இந்த தேசிய அரசுடன் இணைந்திருப்பது யாருடைய தனிப்பட்ட தேவைகளுக்காகவும் அல்ல. மக்களின் நலனை பாதுகாக்க வேண் டும் என்பதற்காகவே.
அதே போல் நூறு நாட்களில் பல மாற்றங் களை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே. குறிப்பாக சொல்வதாயின் இப்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறைமையில் மாற்றத்தினை கொண்டு வர வேண்டும். ஆனால் தேர்தல் முறைமை யில் மாற்றத்தினை ஏற்படுத்துவதில் பிரதான அரசியல் கட்சிகள் யாருக்கும் ஈடுபாடு இல்லையென்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் இப்போது இருக்கும் தேர்தல் முறையில் சாதகமான விடயங்கள் சில இருந்தாலும் பாதகமான விளைவுகளும் வீண் செலவுகளுமே அதிகமானது. ஆனால் இவ் முறைமை நீக்கப்படுவதால் பிரதான சிலர் அரசியலுக்கு வர முடியாமையின் காரணத்தினாலேயே வெறுக்கின்றனர். ஆனால் உடனடியாக தேர்தல் முறைமையில் மாற் றம் கொண்டு வரப்பட வேண்டிய தேவை உள்ளது. இவை தொடர்பில் தேசிய நிறைவேற்று அதிகார சபையில் பேசி வருகின் றோம்.
ஆனால் இன்று தேசிய அரசாங்கத்தின் நூறு நாட்களில் இதை செய்து முடிப்பதற்கான கால அவகாசமோ எஞ்சியிருக்கும் நாட்களோ போதாது. இவ்வாறானதொரு நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் தேர்தலை நடத்தக் கோரி அவசரப்படுத்துகின்ற னர். அவர்கள் தேர்தலை நடத்த வேண்டுமென்பதாயின் நாம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தேர்தல் நடத்த முன் னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையி னை முழுமையாக மாற்றியும் 17ஆவது திரு த்தச் சட்டத்தினை செயற்படுத்தியும் அதே போல் தேர்தல் முறைமையில் மாற்றத்தி னை ஏற்படுத்தியும் விட்டு பின்னர் தேர்தலை நடத்த வேண்டும்.
எனவே அனைவரும் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். இப்போது அமையப்பெற்றுள்ள தேசிய அரசு இன்னும் ஒரு வருடம் நீடிக்கப்படுமாயின் நாட்டில் பல திருத்தங்களை கொண்டு வர முடியும். அதற்காக தொடர்ந்து தேசிய அரசாங்கம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பத ல்ல. நூறு நாட்களுக்குள் அனைத்தையும் செய்து முடிக்க முடியுமாயின் நல்லது. அவ்வாறு அல்லாது மக்களுக்கு கொடுத்த வாக் குறுதிகளை இடையில் நிறுத்தி விட்டு தனிக் கட்சி அரசியலை செய்ய நினைப்பதே தவ றானது. எனவே இன்னும் சிறிது காலம் தேசிய அரசினூடாக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
மாதுலுவாவே சோபித தேரர்
இது தொடர்பில் கோட்டை நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த ஆட்சி மூவின மக்களும் ஒன்றிணைந்து பெற்றுக் கொடுத்துள்ள தேசியத்துக்கான ஆட்சியாகும். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரினதும் பங்களிப்பும் அனைத்து கட்சிகளின் பங்களிப் பும் இத் தேசிய அரசில் உள்ளது. எனவே அவ்வாறான அனைவரினதும் ஒத்துழை ப்புடன் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் அவற்றினை மீண்டும் சீரழிக்கும் வகையில் தவறுகளை விட்டு விடக்கூடாது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சி ஆகியவற்றின் முழுமையான ஆதரவு உள்ளது. இவ்வாறான ஒரு நிலை யில் பாராளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாட்டிற்கு தேவை யான அனைத்து மாற்றங்களையும் ஏற்படு த்தி விட வேண்டும். இல்லாது உடனடி யாக தனிக்கட்சி அரசியலுக்காக பொதுத் தேர்தலை நடத்தினால் நாட்டை மீண்டும் எதிரிகளின் கைகளில் கொடுப்பதற்கு சம மாகிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

