Breaking
Thu. Dec 11th, 2025

‘வாட்ஸ் அப்’பில் வாலிபரை அவமதித்த சவுதி அரேபிய பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டது.

சவுதிஅரேபியாவை சேர்ந்த 32 வயது பெண் ‘வாட்ஸ் அப்’பில் வாலிபர் ஒருவரை பற்றி அவதூறாக செய்தி பரப்பினார். இது குறித்து அந்த வாலிபர் போலீசில் புகார் செய்தார்.

சவுதி அரேபிய சட்டப்படி தொழில்நுட்ப வசதி மூலம் மாற்றவர்களை அவமதிப்பது மற்றும் துன்புறுத்துவது குற்றமாகும். எனவே, அப்பெண் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அப்பெண்ணுக்கு ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் அபராதம் விதித்தது. அதற்கு அந்த வாலிபர் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த பெண் பரப்பிய அவதூறு மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே கடுமையாக தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

எனவே அந்த பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Related Post