விட்டுக்கொடுப்புக்கு தயாரில்லை- அத்துரலியே ரத்தன தேரர்

19வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான தமது கட்சியின் கொள்கையை எந்தவிலைக்கும் விற்க தயாரில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்

தமது கட்சியின் அரசியல் அமைப்பு திருத்த யோசனை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக குறிப்பிட்டார். இதன்போது குழு ஒன்றை நியமித்து அது தொடர்பாக ஆராய்வதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக தேரர் தெரிவித்தார்.

அந்தக்குழு தமது பரிந்துரையை ஐந்து நாட்களுக்குள் வழங்கவுள்ளது. எனினும் இதற்கிடையில் இடைக்கால உடன்பாடுகளுக்கு செல்ல தமது கட்சி தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.