Breaking
Fri. Dec 5th, 2025

சாய்ந்தமருது விதை நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் கொழும்பில் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்து அந்தப் பிரதேசத்தின் நெல் உற்பத்தி தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டிருந்தனர்.

தமது சங்கம் விதை நெல் உற்பத்தியாளர்களின் நன்மை கருதி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை விபரித்த அவர்கள், தமக்கு நெல் சுத்திகரிப்பு இயந்திரமொன்றை பெற்றுத்தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக் கொண்டார்.

இந்த சந்திப்பில் சங்கத்தின் தலைவர் யு. எல். ஏ. வஹாப், செயலாளர் எஸ். எம். ஷரீப், பொருளாளர் யு. கே. ஆதம்பாவா ஆகியோருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது கிளைத் தலைவர் அன்வர் ஹாஜியார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

rr.jpg4_

By

Related Post