விருதோடை, புழுதிவயல் பிராந்தியங்களுக்கான மாவட்ட மத்திய குழுவிற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விருதோடை வட்டாரத்திற்கான ரெட்பானா, விருதோடை பிராந்தியம்  மற்றும் புழுதிவயல்  பிராந்தியங்களுக்கான மாவட்ட மத்திய குழுவிற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் சனிக்கிழமை  (18 ),  விருதோடை வட்டார அமைப்பாளர் ஆஷிக்கின் ஏற்பாட்டில், மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டங்களில் மக்கள் காங்கிரஸின் புத்தள மாவட்ட பிரதான அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டதுடன், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், ஊர்ப்பிரமுகர்கள், கட்சிப் போராளிகள் எனப் பலரும் கலந்துக்கொண்டனர்.

இதன் போது ஊரின் அபிவிருத்தியையும், கட்சியின் வளர்ச்சியையும் நோக்காகக் கொண்ட புதிய குழு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(ப)