Breaking
Mon. Dec 15th, 2025

அரசாங்கம் மக்களுக்கு அறிவித்த பொருட்களுக்கான விலைக் குறைப்பு நுகர்வோர்களை சென்றடைவதில் ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சின் கீழ் உள்ள நுகரவோர் அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பிரதான அலுவலகம் (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அலுவலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கேதீஸ்வரன்,நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர்களான சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்,ருவான் லங்கேஸ்வரன் உட்பட பலரம் கலந்து கொண்டனர்.

இங்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் கருத்துரைக்கும் போது –
பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய பொருட்களுக்கான சலுகை விலைகள் அவர்களை சென்றடையாது இருக்கச் செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கையெடுக்கப்படும்.அரசாங்கம் பொது கொள்கையொன்றினையடுத்து அதனை சட்டமாக்கி நடைமுறைக்கு கொண்டுவருகின்ற போது அதற்கு வர்த்தகர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

வடக்கில் வாழும் மக்கள் தரமான.குறைந்த விலையில் தமக்குத் தேவையான அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான புதிய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இதனை மக்கள் அனுபவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதே போன்ற பாவணையாளர்களுக்கான நுகர்வோர் அதிகார சபை அலுவலகம்,முல்லைத்தீவு மற்றும மன்னார் மாவட்டங்களில் இன்னும் சில வாரங்களுக்குள் திறந்து வைக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு கூறினார்

Related Post