இர்ஷாத் றஹ்மத்துல்லா
வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்பட்ட விலைக் குறைப்பு நிவாரணம் மக்களை சென்றடைவது தொடர்பில் கண்டறியும் வகையில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் மன்னார் சதொச கூட்டுறவு தொகுதிக்கு திடீர் விஜயமொன்றினை இன்று (2015.03.09) மேற்கொண்டார்.
மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சகிதம் இங்கு விஜயம் செய்த அமைச்சர் களஞ்சியசாஉயணலையின் தற்போதைய நிலையினை பார்வைியட்டதுடன்,களஞ்சியப் படுத்தப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டதுடன்,அதனை உரிய முறையில் பாதுகாப்பாக வைக்குமாறு பணியாளர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.
அதே வேளை அத்தியவசிய பொருட்களின் தரத்தையும்,அதனைது விலைகளையும் பரிசீலனை செய்த அமைச்சர் அங்கு பொருட் கொள்வனவு செய்து கொண்டிருந்த நுகர்வோர்களிடத்தில் கருத்துக்களையும் கேட்டு கொண்டார்.
மன்னார் நகரத்தில் அமைந்துள்ள பிரதான சதெச நிறுவனத்தினை இன்னும் பொலிவு கொண்டதாக மாற்றுவதற்கு தேவையான ஆலோசனைகளையும் இதன் போது வழங்கினார்.
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் சதொச நிறுவனம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் முதன் முறையாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது தேர்தல் தொகுதியில் உள்ள சதொச நிறுவனத்திற்கு பொருட்களின் தரம் தொடர்பில் கண்டறிய முதலாவது விஜயத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில் –
நாடு முழுவதும் தமது அமைச்சின் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பினை மேற்கொள்ளும் வகையில் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,அரசாங்கத்தின் விலை குறைப்பை மக்களுக்கு கிடைக்க செய்யாத வியாபாரிகள் தொடர்பிலும் உரிய சட்ட நடவடிக்கையினை எடுக்க தேவையான ஆலோசனை நுகர்வோர்அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


