Breaking
Mon. Dec 8th, 2025

பல தசாப்த காலமாக குருணாகல் நகரை சுத்தமயப்படுத்தும் ஊழியர்களின் சுமார் 118 குடும்பங்களின் வீடற்றப் பிரச்சினைக்கு, நிரந்தரமானதோர் தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாநகரசபை உறுப்பினர் அசார்தீன் மொய்னுதீன் தெரிவித்தார்.

குருணாகல் மாநகரசபையின் மூன்றாவது அமர்வில் ஐ.தே.க யின் உருப்பினர் செல்வநாயகி முத்தையா அவர்கள் கொண்டு வந்த பிரேரணைக்கமைய கருத்து தெரிவிக்கையிலையே அசார்தீன், இக்கோரிக்கையை மாநகர முதல்வர் உட்பட அனைத்து உறுப்பினர்களிடமும் முன்வைத்தார்.

மேலும், இத்தொழிலாளர்கள் எமது நகரின் இதயத்தைப் போன்றவர்கள். அவர்கள் சரியான அடிப்படை வசதிகளின்றி, ஓர் குடிசையில் நான்கைந்து குடும்பங்கள் வாழ்வதாகவும், சிறப்பான சூழல் காணப்படாமையினாலேயே அவர்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைவதை தடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வில்கொடை கிராமத்தில் அவர்களுக்கு வாழக்கூடிய வகையில், நிரந்தர வீட்டு வசதியை மாநர சபையாகிய நாம் முன்னின்று பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட முதல்வர் துஷார சன்ஜீவ மற்றும் சு.க உருப்பினர் கிருஷ்ணபாலன் தியாகராஜா ஆகியோர், இதற்கான தீர்வை மிகவிரைவில் பெற்றுக்கொடுப்போமென உறுதியளித்தனர்.

(ன)

Related Post