Breaking
Sun. Dec 7th, 2025
வெளிநாட்டவர்களுக்கு வீசா வழங்கும் போது தற்போது பாவனையில் உள்ள உத்தியோக பூர்வ முத்திரைக்கு பதிலாக புதிய பாதுகாப்பு ஸ்டிக்கரை பயன்படுத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்பொருட்டு அவ்வாறான ஸ்டிக்கர்களை அச்சிடுவதற்கு, தற்போது அரசாங்கம் அச்சக கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அச்சகத்தின் முத்திராதிபதி லலித் டி சில்வா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இந்த புதிய நடைமுறையின் கீழ் வெளிநாட்டவர்களுக்கு முற்னேற்றகரமானதும் முழுமையான பாதுகாப்பானதுமான விசாவை பெற்றுக்கொடுக்க முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்கள பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

Related Post